Posts

திருக்கார்த்திகை திருநாள்

Image
திருக்கார்த்திகை திருநாள்  திருக்கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது தீபம். இக்கார்த்திகை திருநாளென்பது வீடுதோறும் விளக்கேற்றி இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியின் அருவுருவான கடவுளை வணங்குவதே ஆகும். கார்த்திகை என்றால் கார்காலத்தின் முடிவு என்று பொருள். கார்த்திகை மாதத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகையானது இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13, 2024 அன்று வெள்ளிக்கிழமை கொண்டாட படுகிறது.  பண்டைய தமிழர், 27 நட்சத்திரங்களையும் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு நாளுடனும் ஒப்பிட்டு, அந்த நட்சத்திரத்தின் பெயர் கொண்டு அழைத்தனர். அந்த 27 நட்சத்திரங்களுள் ஒன்று தான் கார்த்திகை ஆகும். இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை சிறப்பாக கருதி திருக்கார்த்திகை என பெயரிட்டு கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர்.  வழக்கம் போலவே, இந்துக்கள் பண்டிகை என்றாலே அதற்கு பற்பல புராணக்கதைகளும் வரலாறும் உண்டு. அதுபோலவே இத்திருக்கார்த்திகைக்கும் பல வரலாறு உண்டு. கார்த்திகையின் வரலாற்றை காண்பதற்கு முன்...

இரவை பகலாக மாற்றும் தீபத் திருநாள்

Image
எத்திசையும் கொண்டாடும்  தித்திக்கும் தீபாவளி தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இத்தீப ஒளி திருநாளுக்கே, நாம் ஏன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? தீபாவளியின் பொருள் என்ன? என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றது.  குழந்தைகள் மத்தாப்புகள் வெடித்து மகிழ்கின்றனர். https://pin.it/5EBMuy6qM இந்துகளின் பண்டிகை என்றாலே அது பல புராணக்கதைகளுடன் இணைந்திருக்கும். அதுபோலவே இத்தீப ஒளி திருநாளும் பல புராண இதிகாசங்களுடன் இணைந்து பல கதைகளை தருகிறது. தீப திருநாள், தீப ஒளி திருநாள், தீப ஒளி என பல பெயர்களால் அழைக்கப்படும் தீபாவளியானது பல்வேறு மத மக்களால் கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? என்று கேட்டால் அனைவரும் கூறும் கதை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பது தான். ஆனால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தது துவாபரயுகத்தில் தான் நடக்கிறது. அப்படி என்றால் நாம், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்வதற்கு முன்பே தீப...

தசரா திருவிழா வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்

Image
தசரா திருவிழா கொண்டாட்டம்   தசரா திருவிழா  இந்தியா முழுவதும் ஒரே காலத்தில் கொண்டாடப்படும் ஒரே திருவிழா தசரா. ஆனால், இந்தப் பண்டிகையின் பெயர் இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என மாறுபடும். ஆயினும் இப்பண்டிகை அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது அம்மன் வழிபாடு. விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா , இந்தியாவில் மிக முக்கியமான மற்றும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பத்து தலைகள் கொண்ட அரக்கன் ராவணனின் தோல்வியை குறிப்பதே தசரா என்பதன் பொருள்.  தசரா புராணக் கதை  இந்துக்கள் பண்டிகை என்றாலே, அது புராணக்கதைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கும். அதுபோலவே, இத்தசரா திருவிழாவும்.  1. ராமன் மற்றும் இராவணன் கதை:  ராமன் மற்றும் இராவணனின் கதையை அறியாதவர் இவ்வுலகில் இலர். இந்தியாவில் தசரா கொண்டாடப்படுவதற்கு முதன்மையான காரணம், அரக்க மன்னன் இராவணனை ஶ்ரீராமன் வென்றதை கொண்டாடும் நோக்கில் தான். இந்து இதிகாசமான ராமாயணத்தின் படி, இராவணன் ராமரின் மனைவியான சீதாதேவியை இலங்கை மாநகருக்கு கடத்திச் சென்றான். அவளை மீட்பதற்காக, பகவான் ஶ்ரீராமர், அவரது சகோதரர் லட...

தென்னிந்தியாவின் ஆயுத பூஜை

Image
 ஆயுத பூஜை நவராத்திரியின் 9வது நாள் ஆயுத பூஜை என்பது இந்து மத மக்களால் நவராத்திரியின் 9வது நாளில் கொண்டப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இது 10 வது நாளில் (தசரா) அனுசரிக்கப்படுகிறது.  ஆயுத பூஜை தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்விழாவனது ஒன்பது நாட்கள் நிகழும். இக்காலக்கட்டத்தை நவராத்திரி என்று அழைப்பர்.  நவராத்திரி வழிபாட்டில் "கொலு" மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒன்பது நாட்கள் நிகழும் இவ்விழாவானது மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு செய்யப்படுகிறது. கல்வியின் அதிபதியான சரஸ்வதியை வழிபாடு செய்வதால் இந்நாள் சரஸ்வதி பூஜை என்றும், கல்விக்கு இணையாக உள்ள தொழிலையும் அதன் கருவிகளையும் வழிபாடு செய்யும் முறை ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் வைக்கப்பட்டுள்ள கொலு  https://pin.it/2eUZz1eMq ஆயுத பூஜையின்...

உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

Image
பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை  இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவாக ஆவணி திருவோணம் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு மற்றும் மன்னன் மகாபலி ஆகியோரின் நினைவாக ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். ஆவணி திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை மலையாள ஆண்டான சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இவ்விழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளத்தின் " அறுவடைத் திருநாள் " என்றும் அழைப்பர்.  மகாபலி சக்கரவர்த்தியின் நவீன புனைவு படம்  மன்னன் மகாபலி சக்கரவர்த்தி   மகாபலி சக்கரவர்த்தி என்னும் மன்னன் முற்பிறவியில் எலியாக பிறந்தார். ஒரு நாள் சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த அந்த எலி, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டது. மீண்டும் அந்த விளக்கு தூண்டப்பட்டு ...

விநாயக சதுர்த்தி

Image
விநாயக சதுர்த்தி பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன், சிவபார்வதியின் மைந்தன், கணபதி, ஆனைமுகன் என இன்னும் பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தி திருநாளில் கொண்டாடப்படுகிறது.  அதன்படி, குரோதி வருடமான 2024 -ல் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டடப்படுகிறது.  இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. விநாயகர், புதிய தொடக்கங்களின் கடவுள், முழுமுதற்கடவுள், தடைகளை நீக்குபவர், ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுள் என போற்றப்படுகிறார். பெரியபிள்ளை வலசையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் உருவ சிலை விநாயகர் சதுர்த்தி வரலாறு... விநாயக சதுர்த்தி எப்போது முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்பது அறியப்படவில்லை என்றாலும் மன்னன் சிவாஜியின் காலத்திலிருந்தே இந்த விழா புனேவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது . இந்தியாவில், விநாயக சதுர்த்தி முதன்மையாக மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா , மத்தியப் பிரதேசம் , குஜராத் , ராஜஸ்தான் மற்...