விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்தி
பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன், சிவபார்வதியின் மைந்தன், கணபதி, ஆனைமுகன் என இன்னும் பல பெயர்களால் அழைக்கப்படும் விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தி திருநாளில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, குரோதி வருடமான 2024 -ல் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டடப்படுகிறது.
இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. விநாயகர், புதிய தொடக்கங்களின் கடவுள், முழுமுதற்கடவுள், தடைகளை நீக்குபவர், ஞானம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கடவுள் என போற்றப்படுகிறார்.
![]() |
| பெரியபிள்ளை வலசையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் உருவ சிலை |
விநாயகர் சதுர்த்தி வரலாறு...
விநாயக சதுர்த்தி எப்போது முதன்முதலில் கொண்டாடப்பட்டது என்பது அறியப்படவில்லை என்றாலும் மன்னன் சிவாஜியின் காலத்திலிருந்தே இந்த விழா புனேவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது .
இந்தியாவில், விநாயக சதுர்த்தி முதன்மையாக மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களான மகாராஷ்டிரா , மத்தியப் பிரதேசம் , குஜராத் , ராஜஸ்தான் மற்றும் கோவா ஆகிய இடங்களிலும், தென் மாநிலங்களான கர்நாடகா , ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானாவில் உள்ள உள்ளூர் சமூக மக்களால் வீட்டிலும், பொது இடங்களிலும் கொண்டாடப்படுகிறது . தமிழ்நாடு மற்றும் கிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், ஒடிசா போன்ற இடங்களிலும், வடகிழக்கு மாநிலமான அசாமிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டும் அல்லாமல் பாகிஸ்தானில், இங்கிலாந்து, வடஅமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், போன்ற உலக நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பலகாரங்கள்..
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த பலகாரம், பூக்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. விநாயகருக்கு பிடித்த பலகாரமாக மோடக் (தமிழில் கொழுக்கட்டை) இடம் பெறுகிறது. அதுமட்டுமன்றி விநாயகப் பெருமானுக்கு மோதகம், லட்டு, அப்பம், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை மிகவும் விருப்பமான உணவுகளாக சொல்லப்படுகிறது.
கொண்டாட காரணம் என்ன?
திரு விழாவின் கடைசி நாளில், பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, கடல்களில் கரைக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி அன்று பூமிக்கு வரும் கடவுள், நீர்நிலைகளில் மூழ்கிய பிறகு தனது இருப்பிடத்திற்கு திரும்புவதாக நம்பப்படுகிறது. விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும்போது, வீட்டில் உள்ள பல்வேறு இன்னல்கள் நீங்கும் என்றும், எவ்வித தடைகளும் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
https://tamil.news18.com/news/spiritual/history-of-vinayagar-chathurthi-vai-553085.html
https://tamil.oneindia.com/spirtuality/good-time-to-perform-vinayagar-chathurthi-pooja-636235.html

Comments
Post a Comment