தென்னிந்தியாவின் ஆயுத பூஜை

 ஆயுத பூஜை

நவராத்திரியின் 9வது நாள்

ஆயுத பூஜை என்பது இந்து மத மக்களால் நவராத்திரியின் 9வது நாளில் கொண்டப்படுகிறது. அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இது 10 வது நாளில் (தசரா) அனுசரிக்கப்படுகிறது.

 ஆயுத பூஜை தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்விழாவனது ஒன்பது நாட்கள் நிகழும். இக்காலக்கட்டத்தை நவராத்திரி என்று அழைப்பர். 

நவராத்திரி வழிபாட்டில் "கொலு" மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒன்பது நாட்கள் நிகழும் இவ்விழாவானது மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு செய்யப்படுகிறது. கல்வியின் அதிபதியான சரஸ்வதியை வழிபாடு செய்வதால் இந்நாள் சரஸ்வதி பூஜை என்றும், கல்விக்கு இணையாக உள்ள தொழிலையும் அதன் கருவிகளையும் வழிபாடு செய்யும் முறை ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் வைக்கப்பட்டுள்ள கொலு 
https://pin.it/2eUZz1eMq


ஆயுத பூஜையின் புராணக்கதை :

               இவ்விழாவானது இரு புராணக் கதைகளுடன் தொடர்புடையது. புராணக் கதையின் படி, மகா சக்தியான தேவி துர்க்கா மகிஷாசுரா என்ற அரக்கனை அஷ்டமி மற்றும் நவமி சந்திக்கும் நாளில் கொன்றதாகவும், பின்னர் அந்த வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேவியின் முன் போட்டதாகவும் கூறப்படுகிறது. மகாசக்தியான துர்க்கா தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 

மகாபாரத இதிகாசத்தின் படி, பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று யார் கண்ணிலும் படாமல் வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் தன் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்து சென்றார். ஒரு வருட கால வனவாசம் முடிந்து திரும்பிய பாண்டவர்கள் வன்னி மரத்தின் கீழ் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். பின்பு அவ்வாயுதங்களை எடுத்து வழிபாடு நடத்தி குருக்ஷேத்திர போருக்கு சென்று வெற்றியைக் கண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வழிபட்ட இந்நாளையும் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது. 

ஆயுத பூஜை வழிபடும் முறை:

முந்தைய காலக்கட்டத்தில் அரசர்கள் தங்கள் போருக்கு பயன்படுத்தபடும் ஆயுதங்கள், யுத்த ரதங்கள், குதிரைகள் வாள்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து திலகங்களால் அலங்கரிக்கப்பட்டு புஜித்தனர். இன்றைய காலக்கட்டத்தில் நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து பூக்கள், சந்தனம், குங்குமம் வைத்து பூஜைக்கு வைக்க வேண்டும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியையும் இந்நாளில் நினைவுக்கூறுவதனால், கல்வி உபகரணங்களான புத்தகம், பென்சில், நோட்டு போன்றவற்றையும் பூஜையில் வைக்க வேண்டும். பூஜை நாட்கள் முடியும் வரை ஆயுதங்களையோ, கல்வி உபகரணங்களையோ பூஜையில் இருந்து எடுக்க கூடாது. 

தங்கள் வாழ்வை உயர்த்தும் ஆயுதங்களை தெய்வமாக கருதி வழிபடுவதே இந்நாளில் சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையை கொண்டாடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் அருளை பெறலாம்.

Comments

Popular posts from this blog

திருக்கார்த்திகை திருநாள்

உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

விநாயக சதுர்த்தி