இரவை பகலாக மாற்றும் தீபத் திருநாள்
எத்திசையும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இத்தீப ஒளி திருநாளுக்கே, நாம் ஏன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? தீபாவளியின் பொருள் என்ன? என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றது. குழந்தைகள் மத்தாப்புகள் வெடித்து மகிழ்கின்றனர். https://pin.it/5EBMuy6qM இந்துகளின் பண்டிகை என்றாலே அது பல புராணக்கதைகளுடன் இணைந்திருக்கும். அதுபோலவே இத்தீப ஒளி திருநாளும் பல புராண இதிகாசங்களுடன் இணைந்து பல கதைகளை தருகிறது. தீப திருநாள், தீப ஒளி திருநாள், தீப ஒளி என பல பெயர்களால் அழைக்கப்படும் தீபாவளியானது பல்வேறு மத மக்களால் கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? என்று கேட்டால் அனைவரும் கூறும் கதை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பது தான். ஆனால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தது துவாபரயுகத்தில் தான் நடக்கிறது. அப்படி என்றால் நாம், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்வதற்கு முன்பே தீப...